விளையாட்டு போட்டியில் பங்கேற்க சீருடையுடன் வந்த வெளிநபர்கள்


விளையாட்டு போட்டியில் பங்கேற்க சீருடையுடன் வந்த வெளிநபர்கள்
x

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க சீருடையுடன் வந்த வெளிநபர்கள் போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்துக்குட்பட்ட 140 பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது மாணவர்கள் அல்லாத வெளி நபர்கள் சிலர் சீருடையில் வந்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த மற்ற மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சீருடை அணிந்து பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பள்ளியில் படிக்காத சிறுவர்கள் என்பதும் வெளியில் இருந்து விளையாடுவதற்காக சீருடையில் பள்ளிக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினா். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story