விளையாட்டு அறக்கட்டளைக்கு ஒட்டுமொத்த சாம்பியன்


விளையாட்டு அறக்கட்டளைக்கு ஒட்டுமொத்த சாம்பியன்
x

தடகளபோட்டியில் விளையாட்டு அறக்கட்டளை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

ஆண்கள் பிரிவில் ஜோலார்பேட்டை விளையாட்டு அறக்கட்டளை சார்பில் 78 புள்ளிகள் பெற்று 43 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

பெண்கள் பிரிவில் ஆலங்காயம் தனியார் பள்ளி அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

இவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டத்தில் வரும் 14-ந் முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.


Next Story