தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்துவிநாயகர் கோவில் தெருவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை சார்பில் "தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை, என் பொறுப்பு" என்னும் திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த தூய்மை பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் என்.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தூய்மை பணியை தி.மு.க. நகர செயலாளரும், தூய்மை அருணை மேற்பார்வையாளருமான ப.கார்த்திவேல்மாறன் தொட்ங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் டி.சக்திவேல் வி.மால்முருகன், நகரமன்ற உறுப்பினர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் உள்பட நகராட்சி பணியாளர்கள், தூய்மை அருணை காவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக "தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை, என் பொறுப்பு" என்னும் திட்டத்திற்காக உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.