காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த சிறப்பு தூய்மைப்பணி


காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த சிறப்பு தூய்மைப்பணி
x
தினத்தந்தி 10 Jun 2023 5:56 PM IST (Updated: 11 Jun 2023 11:24 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த சிறப்பு தூய்மைப்பணி தொடங்கியது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த சிறப்பு தூய்மைப்பணி தொடங்கியது.

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த சிறப்பு தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் லதா நரசிம்மன் கலந்துகொண்டு 15-வது வார்டில் உள்ள இருளர் காலனியில் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள், மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

மேலும் கழிவுநீர் கால்வாய்களில் போடப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டு கொண்டாபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பேரூராட்சி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காஜா உமர், இந்திரா, உமா, அலுவலக துப்புரவு பணியாளர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்


Next Story