மணிமுத்தாறு அருவியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மணிமுத்தாறு அருவியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தலா 2 அடி உயர்ந்து வருகிறது. நேற்று 66.65 அடியாக இருந்த நிலையில் இன்றும் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து 68.85 அடியாக உள்ளது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story