ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:04 AM IST (Updated: 23 Jun 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

வாங்கூர் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள வாங்கூர் ஊராட்சி வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.15.5 லட்சத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணிபெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல்நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இதேபோன்று வாங்கூர் ஊராட்சியில் உள்ள இடையன் தாங்கல் கிராமத்தில் உள்ள பள்ளியில் ரூ.7½ லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமையலறை திறந்து வைக்கப்பட்டது. வாங்கூர் கிராமத்தில் நத்தம்பேட்டை தெருவில் சாலை அமைக்கவும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அழகரசன், சின்ன பொண்ணு, வரதராஜபுரம் வேலு, சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன், கரடிகுப்பம் துணைத் தலைவர் கனகராஜ், இடையன் தாங்கல் ரமேஷ் நவமணி, கங்காபுரம் தலைவர் தமிழரசன், கரடிகுப்பம் துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story