மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து ராமநாதபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமநாதபுரத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.4.99 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் டார்வின் வரவேற்றார். இதில் வார்டு உறுப்பினர் பிரபு, ஊர் பிரமுகர்கள் கோபால், பொன்பாண்டி, முருகராஜ், சங்கர், சக்திக்குமார், பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.


Next Story