மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்- தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்- தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்- தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு (சி.ஐ.டி.யு.) சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், ஒருங்கிணைப்புக்குழு மாநில செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.11,050 மாத ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 36 மாத ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் ஊராட்சிகள் மூலம் நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story