மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி ரூ.5 ஆயிரத்து 848 ஆகியவை என மொத்தம் மாத ஊதியம் ரூ.13 ஆயிரத்து 848 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர் மாடசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்வேல், முருகன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story