இரவோடு இரவாக பணி நீக்கம்: அம்மா உணவக ஊழியர்கள் தர்ணா போராட்டம்


இரவோடு இரவாக பணி நீக்கம்: அம்மா உணவக ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

கடலூரில் இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா உணவக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் உழவர் சந்தை அருகிலும், அரசு தலைமை மருத்துவமனையலும் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றி வந்த 16 பெண் ஊழியர்கள், திடீரென நேற்று இரவு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அம்மா உணவகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story