எருது விடும் விழா


எருது விடும் விழா
x

சிவநாதபுரத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

வேலூர்

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள சிவநாதபுரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. சப்- கலெக்டர் பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினர் உறுதிமொழி ஏற்று விழாவை தொடங்கி வைத்தனர். காளை ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி அளவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 54 மாடுகள் பங்கேற்றது. மாடுகள் முட்டியதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.


Next Story