எருது விடும் விழா


எருது விடும் விழா
x

ஏலகிரிமலையில் எருது விடும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் 6-ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், பர்கூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக விழா குழுவினர் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். தாசில்தார் சிவப்பிரகாசம் வரவேற்றார்.

டெல்லியில் இருந்து விலங்கு நலவாரிய தலைவர் மிட்டல் எருது விடும் விழாவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கு பரிசோதனை செய்த பிறகு எருது விடும் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளித்தனர். காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியபோது முட்டியதில் 6 பேர் படுகாயமடைந்தனர் இதில் ஒரு வாலிபர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.


Next Story