போடம்பட்டியில்எருது விடும் விழா


போடம்பட்டியில்எருது விடும் விழா
x
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அளேசீபம், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பூவத்தி, அச்சமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 350 காளைகள் அழைத்து வரப்பட்டன. அதேபோல ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன. தடுப்பு வேலிகள் நடுவே காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் குறைவான நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. சில காளைகள் கூட்டத்துக்குள் புகுந்ததில் 10-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

1 More update

Next Story