நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து..!


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து..!
x

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிராமணம் செய்து வைத்தார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"தமிழ்நாடு நிதி அமைச்சராகத் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய புதிய பொறுப்பில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய என் நல்வாழ்த்துக்கள்... தமிழ்நாடு தொழில் அமைச்சராகத் டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story