சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பதவியேற்பு..!
சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை,
மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வரும் பி.வடமலை. இவரை, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலை இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story