போலீசார் தாக்கியதில் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு: கி.வீரமணி கண்டனம்


போலீசார் தாக்கியதில் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு: கி.வீரமணி கண்டனம்
x

போலீசார் தாக்கியதில் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு: கி.வீரமணி கண்டனம்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நடந்த அறப்போராட்டத்தில் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த செயல் ஆகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் உரிமை கூட கிடையாது என்பது எந்த வகையில் நியாயம். டெல்லி காவல்துறையின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story