பா.ஜனதா செயலாளர் கைது


பா.ஜனதா செயலாளர் கைது
x

மன்னார்குடி நகர பா.ஜனதா செயலாளர் கைது செய்யப்பட்டார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலராஜ வீதியை சேர்ந்தவர் செந்தில் ராஜ்குமார் (வயது 45). இவர், இரும்பு தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பா.ஜனதா நகர செயலாளராக பதவி வகித்து வரும். இவர், ஒரு மதத்தினர் குறித்து அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கூத்தாநல்லூர் ஜின்னா தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையிலும், மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் உத்தரவின்பேரிலும் மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் செந்தில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story