பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சி.என்.பாளையம் பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விக்கிரவாண்டி தாலுகா சி.என்.பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கடம் புறப்பாடாகி 10.15 மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கும் அதனை தொடர்ந்து விநாயகர், முருகர், பரிவார தேவதைகள், மன்னாதீஸ்வரர் ஆகிய சன்னதிகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் சி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story