சமூகநீதியை விதைத்துப் பாதுகாக்கும் தமிழ்நாட்டில் சமூக அநீதி ஆரியத்தின் 'பாச்சா' பலிக்காது - கி.வீரமணி ஆவேசம்


சமூகநீதியை விதைத்துப் பாதுகாக்கும் தமிழ்நாட்டில் சமூக அநீதி ஆரியத்தின் பாச்சா பலிக்காது - கி.வீரமணி ஆவேசம்
x

சமூகநீதியை விதைத்துப் பாதுகாக்கும் தமிழ்நாட்டில் சமூக அநீதி ஆரியத்தின் ‘பாச்சா’ பலிக்காது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு கவர்னர், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் பிரச்சாரகர் போலவே செயல்பட்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப் போல அன்றாடம் செயலாற்றி வருகிறார். யாருடைய தைரியத்திலோ அல்லது கண் ஜாடையிலோ, விவகாரம், வில்லங்கம் - இவற்றையே பேசி, நாளும் மக்களின் எதிர்ப்பினை மலைபோல் பெறுகின்றார்.

தமிழ்நாடு, பெரியார் மண். நீங்கள் உளறுவதுபோல ஆழ்வார் மண் அல்ல. 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை 'அவாள்கள்' கையொப்பத்தோடு நிறைவேற்றி வைத்து வெற்றி பெற்ற மண். சமூகநீதியை விதைத்துப் பாதுகாக்கும் மண். இங்கே சமூக அநீதி ஆரியத்தின் 'பாச்சா' பலிக்காது. இதனை உணர்ந்து, கவர்னர் பணியை ஒழுங்காக செய்யுங்கள் என்று எச்சரிப்பார்கள் தமிழ் மக்கள். காரணம், நீங்கள் அவர்களது பணியாளர் என்பதை மறவாதீர்! கடமை துறவாதீர்!!

தமிழ்நாடு என்று அழைக்காமல், 'தமிழகம்' என்று கூறவேண்டுமாம். இதுவே பிரித்தாளும் சூழ்ச்சி தானே. 'ஆந்திர பிரதேசம்' என்று இருக்கிறது, 'நாகாலேண்ட்' என்றெல்லாம் இல்லையா? எனவே, ''வெளியேறு, வெளியேறு, கடமை தவறிய கவர்னரே, வெளியேறு!'' என்பதே இனி முழக்கமாகட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story