ரூ.1 லட்சம் மதிப்புள்ள கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்


ரூ.1 லட்சம் மதிப்புள்ள கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்
x

ரூ.1 லட்சம் மதிப்புள்ள கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கலால் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். நாட்டறம்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர்குப்பம் பகுதியில் சோதனை செய்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் 25 அட்டை பெட்டிகளில் 2,400 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காருடன், மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவர் நாட்டறம்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா (வயது 45)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story