திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி


திருவாதிரை திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

திருவாதிரை திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாதிரை திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த தியாகராஜர் கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

பாத தரிசனம்

திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி தியாகராஜருக்கு திருவாதிரை திருவிழா மகா அபிஷேகம் நடந்தது.அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு ராஜநாராயண மண்டபத்தில் தியாகராஜர், பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story