காங்கிரஸ் பாதயாத்திரை
காங்கிரஸ் பாதயாத்திரை குழுவினர் திருப்பத்தூர் வந்தனர்.
திருப்பத்தூர்,
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காரைக்குடி ராஜீவ்காந்தி சிலையிலிருந்து பாதயாத்திரை தொடங்கப்பட்டது. திருப்பத்தூருக்கு வந்த இக்குழுவினருக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ராமசாமி, தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி, பொருளாளர் பழனியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மன், மாவட்ட துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி காந்திசிலைக்கும், மருதுபாண்டியர்கள் நினைவு தூணுக்கும் மாலையிட்டு மரியாதை செய்தனர்.
இதில், சிங்கம்புணரி நகர் தலைவர் தாயுமானவர், வட்டார தலைவர் பன்னீர்செல்வம், ஜெயராமன், பிரசாந்த், இருதயராஜ், திருப்பத்தூர் பேரூராட்சி உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பாத யாத்திரையின் போது மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷமிடப்பட்டது. இப்பயணம் சிவகங்கை வழியாக மானாமதுரையில் முடிவடைய உள்ளது. சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும், மானாமதுரையில் மக்களவை உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரமும் கலந்து கொள்ள உள்ளனர்.