ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பிரசார பாதயாத்திரை


ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பிரசார பாதயாத்திரை
x

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பிரசார பாதயாத்திரை நடந்தது.

ராமநாதபுரம்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு பிரசார பாதயாத்திரை பயணம் செல்கின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரசார விழிப்புணர்வு பாதயாத்திரை பயணம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பாரதிநகரில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அடையார் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், அன்வர்அலி நத்தர், சுப்பிரமணியன், கோடனூர் கணேசன், தட்சிணாமூர்த்தி, நகர் தலைவர் கோபி, மாவட்ட சார்பு அணி தலைவர்கள் கோபால், வாணி செய்யது இபுராகிம், மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அமானுல்லா, முருகானந்தம், கவுன்சிலர் மணிகண்டன், மோதிலால் நேரு, இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை டி-பிளாக், ஓம்சக்தி நகர், தங்கப்பாபுரம், காட்டூரணி வழியாக சென்றது. திருவாடானையில் முடிவடைய உள்ளது.Next Story