நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரதம்


நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
x

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

நெல்லை வக்கீல் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டை கோர்ட்டு முன்பு நேற்று காலையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் மங்களா ஜவஹர்லால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

இதில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் குழும துணைத்தலைவர் கார்த்திகேயன், செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னாள் நியமன உறுப்பினர் ராஜா முகமது, தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணியன்,

நெல்லை வக்கீல் சங்க உதவி செயலாளர் பரமசிவன், முன்னாள் செயலாளர் மரியகுழந்தை, முன்னாள் அரசு வக்கீல்கள் ராஜா பிரபாகர், அன்பு அங்கப்பன், ஜெயபிரகாஷ், வக்கீல்கள் பாலகணேஷ், ஜாபர் அலி, பரிமளம், ராம்நாத், ராமநாதன் பெருமாள், பிரம்மநாயகம், பாலாஜி, ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நந்தகுமார் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். நெல்லை வழக்கறிஞர் சங்க பொருளாளர் நெல்சன் ஜெபராஜ் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட்டத்தையொட்டி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


Next Story