போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்


போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
x

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன.

திருவண்ணாமலை

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் போளூர் 2-வது இடம் பெற்றுள்ளது. இங்கு தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மூட்டைகள் வரை விவசாயிகளின் விளைபொருளான நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு போளூர், கேளூர், செங்குணம், சனிக்கவாடி உள்பட 40 கிராமங்களில் இருந்து தினமும் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன.

நெல் மூட்டைகள் காஞ்சீபுரம், கலவை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு நெல் மூட்டைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும், உடனே பணம் தங்கள் கணக்கில் வரவு வருவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சன்னரகம் நெல் 75 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.1,450 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும், குண்டு ரகம் ரூ.1,300 முதல் ரூ.1,639 வரையிலும், கோ-51 ரகம் ரூ.1,280 முதல் ரூ.1,549 வரையிலும் விற்பனை ஆயின.

நெல் மூட்ைடகள் தேக்கம்

மத்திய அரசின் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ.என்.ஏ.எம்) திட்டத்தின் கீழ் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.

வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் இங்குள்ள 8 கிடங்குகளிலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இடம் இல்லாமல் சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் களத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கண்காணிப்பாளர் எம்.வெங்கடேசன் கூறுகையில், விவசாயிகள் நெல் அறுவடை ஆனவுடன் ஈரப்பதம் இன்றி நன்கு உலர்த்தி கொண்டு வந்தால், கூடுதலாக நல்ல விலை அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறி வருகிறோம். தற்சமயம் சம்பா பருவம் முடிந்து விவசாயிகள் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால், நெல்வரத்து அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளனர்' என்றார்.


Next Story