மடத்துக்குளம் பகுதியில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மடத்துக்குளம் பகுதியில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
x

மடத்துக்குளம் பகுதியில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பழைய ஆயக்கட்டு

மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர், கொழுமம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர்ப் பற்றாக்குறை, கூலி ஆட்கள் தட்டுப்பாடு, போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இதனால் ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் ஒருசில விவசாயிகள் தென்னை, வாழை போன்ற மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.

பருவமழை

இந்தநிலையில் கடந்த சில பருவங்களில் அமராவதி அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், நடவு முதல் அறுவடை வரை எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும் மீண்டும் நெல் சாகுபடியின் பக்கம் விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 90 அடியில் 64.05 அடியாக உள்ளது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 240 கன அடியாக உள்ளது.மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 270 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அமராவதி ஆற்றிலிருந்து ராஜவாய்க்கால்கள் மூலம் திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நெல் சாகுபடிக்காக நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கென நெல் வயல்களில் குறிப்பிட்ட அளவிலான இடம் தேர்வு செய்து நீர் பாய்ச்சி சேறாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நாற்றங்கால் அமைத்துள்ள விவசாயிகள் நாற்று மூலமும், மற்ற விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.

Next Story