அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

பேரளத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நன்னிலம்;

பேரளத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு 2ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. நன்னிலம், வலங்கைமான், குடவாசல், ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு கூலித் தொழிலாளர்கள் சரக்கு ெரயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டது. பின்னர் நெல் மூட்டைகளுடன் சரக்கு ெரயில் புறப்பட்டு காஞ்சீபுரத்துக்கு சென்றது.

1 More update

Next Story