நேரடி நெல் விதைப்பு திட்ட செயல் விளக்கம்


நேரடி நெல் விதைப்பு திட்ட செயல் விளக்கம்
x
தினத்தந்தி 8 July 2023 8:39 PM GMT (Updated: 9 July 2023 11:34 AM GMT)

அய்யம்பேட்டை அருகே நேரடி நெல் விதைப்பு திட்ட செயல் விளக்கம் நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை அருகே ஈச்சங்குடி கிராமத்தில் தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் பி. ஐ. பவுண்டேசன் சார்பில் "நவீன நேரடி நெல் சாகுபடி செயல் விளக்க திட்டத்தின்" கீழ் பயிற்சி மற்றும், நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் நெல் விதைப்பு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. பயிற்சியில், டிரம் சீடர் மூலம் நேரடி நெல் விதைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், களை, பூச்சி, நோய், எலி கட்டுப்பாட்டு முறை மற்றும் நீர்மேலாண்மை போன்ற தொழில் நுட்பங்கள் குறித்து தேசிய வேளாண்மை நிறுவன வேளாண் வல்லுநர் ரமேஷ் ராஜா விளக்கம் அளித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, தேசிய வேளாண் நிறுவன வேளாண் கள அலுவலர்கள் ஸ்ரீீமுருகன், கிருஷ்ணா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story