நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா


நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
x

நெல்லை தாமிரபரணி ஆற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு விழா

ஆடி மாதம் 18-ம் பெருக்கை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் சார்பில் தாமிரபரணி அன்னைக்கு 108 வகையான சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நெல்லை மீனாட்சிபுரம் சிருங்கேரி சாரதா மடத்தில் இருந்து மஞ்சள், குங்குமம், பழங்கள், காய்கறிகள், மலர்கள் நவதானியங்கள் உள்ளிட்ட 108 வகையான சீர்வரிசை பொருட்களை தாமிரபரணி அன்னைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தாமிரபரணி ஆற்றில் தைப்பூச மண்டப படித்துறையில் பூஜை நடைபெற்றது. பின்னர் தாமிரபரணி ஆற்றில் மஞ்சள், பால், குங்குமம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

தீப ஆரத்தி

தங்கம், வெள்ளி நாணயங்கள் தாமிரபரணி நதிக்கு படைக்கப்பட்டு பட்டாடை வஸ்திரங்கள் ஆகியவை சமர்ப்பணம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்த 108 வகையான சீர்வரிசை பொருட்களையும் தாமிரபரணி நதியில் சமர்ப்பித்து மகா தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதியை வணங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் பலர் தாமிரபரணி நதியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.


Next Story