நச்சலூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்


நச்சலூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
x

நச்சலூர் பகுதியில் ெநல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்

சம்பா நெல் சாகுபடி

கரூர் மாவட்டம், நச்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நெய்தலூர், நெய்தலூர் காலனி, கட்டாணி மேடு, சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர், நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நெல் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பிபிடி, ஆந்திரா பொண்ணி, கர்நாடக பொண்ணி ஆகிய நெல் நெற்கதிர்களை எந்திரம் மற்றும் கூலி ஆட்கள் மூலம் கையருப்பு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பயனுள்ளதாக உள்ளது

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காலங்காலமாக முறைப்படி உழவு பணி மேற்கொண்டு வருகிறோம். பயிர் விட்டு பின்னர் நடவு பணியில் செய்த பிறகு நெற்கதிர்கள் நன்றாக வளர்ந்த நிற்கும். பின்பு 4 அல்லது 5 மாதங்களில் நெல் அறுவடை பணிகளில் ஈடுபடுவோம். இதனால் ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் வரை நல்ல மகசூல் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


Next Story