அரிசி மொத்த வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம்
அரிசி மொத்த வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
கரூரில் மாவட்ட நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சம்பத் வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். துணைத் தலைவர் கோவிந்தராஜ், துணைச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வணிகர் நல வாரியம் அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, வணிக நிறுவனங்களில் முறையாக சோதனை செய்ய வேண்டும், 26 கிலோவுக்கு கீழ் உள்ள அரிசி வகைகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை முற்றிலும் நீக்க வேண்டும்,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.