கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்
x

மெலட்டூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

மெலட்டூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.

அறுவடை பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை முன்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்கு கொட்டி வைத்துள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக நெல்கொள்முதல் செய்யும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

இதனால் அறுவடை செய்த நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் கொள்முதல் நிலையங்களில் வாரக் கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மழை நீடித்தால் குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யவும் முடியாமல், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

Next Story