பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி


பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி
x

பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூரில் இருந்து சேலத்துக்கு பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசியை சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதனையடுத்து 2,500 டன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் சேலம் புறப்பட்டு சென்றது.


Next Story