ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை

வாடிப்பட்டி,

ஈரப்பதத்தை கணக்கில் எடுக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டிய கீர்த்தி, தலைமை நில அளவையர் செந்தில், யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க தலைவர் சீதாராமன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, வாடிப்பட்டி பகுதியில் ஒரு போக சாகுபடி விவசாய நிலங்களில் தற்போது அறுவடைக்கு நெல் பயிர் தயார் நிலையில் உள்ளது. மேலும் வரும் 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யும் போது அரசு நிர்ணயித்த ஈரப்பதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, நெல் தூற்றுதல், லாரி வாடகை கமிஷன் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்த்தும், அரசு நிர்ணயம் செய்த ரூ.2160-க்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், வருவாய் அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பாக நெல் கொள்முதல் நிலைய குறைபாடுகளை களைய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.


Next Story