நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் கட்டும் பணி தீவிரம்
நன்னிலம் பகுதியில் நெல் அறுவடைக்கு பின் வைக்கோல்களை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நன்னிலம்;
நன்னிலம் பகுதியில் நெல் அறுவடைக்கு பின் வைக்கோல்களை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வைக்கோல் கட்டுகள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தன. இதைத்தொடர்ந்து கால்நடை தீவனத்துக்காக வைக்கோல் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கால்நடைகளின் முக்கிய தீவனமாக இருப்பது வைக்கோல். கடந்த 10 தினங்களாக நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா தாளடி நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வைக்கோல் தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில் இந்த ஆண்டு வைக்கோலுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.100-க்கு விற்பனை
இது குறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி குருமூர்த்தி கூறியதாவது:- அறுவடை முடிந்த வயல்களில் எந்திரம் மூலமாக வைகோல்களை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்திரத்தின் மூலம் வைக்கோல் கட்டுவதற்கு ஒரு கட்டுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை செலவாகிறது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதை உள்ளூா் மற்றும் வெளியூர் வியாபாாிகள் வந்து வாங்கி ெசல்கிறார்கள். கால்நடைகளுக்கு வைக்கோல் பொதுவான உணவு என்பதால் தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவு எங்கள் பகுதிக்கு வந்து கால்நடைகளுக்கு வைக்கோல்களை அதிகமாக வாங்கி செல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினாா்.