வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை


வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை
x

வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை நடந்தது.

கரூர்

பக்தர்களை தாங்கி நிற்கும் படிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், உலக ஜீவராசிகள் நன்மை பெற வேண்டியும் நேற்று கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை நடைபெற்றது. முன்னதாக கரூர் சஷ்டி குழுவினர் வேல், காவடிகள், பால்குடம் எடுத்து கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக வெங்கமேடு, வாங்கப்பாளையம் வழியாக வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்அடிவாரத்திற்கு வந்தனர். பின்னர் கோவிலில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய ஓதுவாமூர்த்திகள் சாம்பசிவம் தலைமையிலான குழுவினர் திருப்புகழ், தேவார திருவாசகமுழக்கத்துடன் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 30 படிகளுக்கும் தேங்காய், பழம், பூக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து படிபூஜையின் சிறப்புகள் குறித்து திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை பழனியப்பன் சிறப்புரையாற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினசனம் செய்தனர்.

1 More update

Next Story