செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள்


செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள்
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்களை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சென்னேரி இருளர் பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரார்கள் மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோர் கலெக்டர் ராகுல் நாத்தை நேரில் சந்தித்து பத்ம ஸ்ரீ விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாகிதா பர்வீன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story