வலுதூக்கும் போட்டிக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் தேர்வு


வலுதூக்கும் போட்டிக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் தேர்வு
x

அகில இந்திய பல்கலைக்கழக வலுதூக்கும் போட்டிக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் தேர்வு செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரியில் தமிழக அண்ணா பல்கலைக்கழகங்களுக்கான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் ராகுல் ரோஹித் பாவை பொறியியல் கல்லூரியின் சார்பாக கலந்து கொண்டு 59 கிலோ உடல் எடை பிரிவில் முதலிடம் பெற்றார். இதன்மூலம் அகில இந்திய பல்கலைக்கழக வலுதூக்கும் போட்டிக்கு தேர்வு பெற்று வருகிற 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார். பின்னர் காஷ்மீரில் நடைபெறும் பெடரேஷன் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்கிறார்.

சாதனை படைத்த வீரர் ராகுல் ரோஹித்தை தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்க தலைவர் ராஜா எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்க செயலர் நாகராஜன், நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், தலைவர் சிவராமலிங்க ரவி, பொருளாளர் தளவாய் மூர்த்தி மற்றும் ஆசிய சாம்பியன் உதயகுமார், நெல்லை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் கள்ளத்தியான் என்ற கண்ணன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர் செல்வகுமார், பயிற்சியாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story