பெயிண்டர் அடித்துக்கொலை


பெயிண்டர் அடித்துக்கொலை
x
திருப்பூர்


வெள்ளகோவிலில் பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தலைமறைவான நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெயிண்டர்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சேடர்தெரு பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் மோகன்ராஜ் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருடன் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(35), ஹக்கீம் (40), கரூரை சேர்ந்த அருண் (25) ஆகியோரும் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் தங்கி இருந்த வீடு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து இவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திய கே.வி.பழனிச்சாமி நகரை சேர்ந்த முரளிதரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மோகன்ராஜ் பிணமாக கிடந்தார். மயங்கிய நிலையில் சதாம் உசேன் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மற்ற 2 பேரை காணவில்லை.

இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மோகன்ராஜ் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சதாம் உசேனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைேரகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து வெள்ளகோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரணம் என்ன?

கொலை நடந்த வீட்டில் தங்கி இருந்தவர்களில் ஹக்கீம் மற்றும் அருண் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். எனவே அவர்களை பிடித்தால்தான் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று தெரியவரும். எனவே அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட மோகன்ராஜூக்கு ராதிகா (27) என்ற மனைவியும், சுகாசினி (11) என்ற மகளும், தர்ஷன்(6) என்ற மகனும் உள்ளனர்.


Next Story