பவானியில் சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது
பவானியில் சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு
பவானி
பவானி பகுதியை சேர்ந்தவர் 44 வயதுடைய பெயிண்டர். பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவருடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள உறவினரின் மகளான 17 வயது சிறுமி சென்றுவந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமியை பெயிண்டர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தார்.
Related Tags :
Next Story