கிணத்துக்கடவு அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


கிணத்துக்கடவு அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர், தோட்டத்து சாலையில் குடியிருந்து வந்தவர். ஆனந்தகுமார் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து செய்து வந்தார். இவருக்கு பாரதி (31) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் உள்ளதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறியும் கேட்காமல் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மதுப்பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.நேற்று காலை ஆனந்தகுமார் மனைவி பாரதி குழந்தைகளுடன் கோவைக்கு சென்றார். வீட்டில் ஆனந்தகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். கோவைக்கு சென்ற பாரதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஆனந்தகுமார் தூக்கு போட்டு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆனந்த குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஆனந்தகுமார் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story