மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 18 Jun 2023 8:38 PM GMT (Updated: 19 Jun 2023 7:34 AM GMT)

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்துள்ள பாதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராதா மகன் சரவணன் (வயது28), பெயிண்டரான, இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். சின்னபொன்னாப்பூர் அருகே வந்த போது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கருக்காய் முட்டில் சரவணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story