ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி


ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி
x

திண்டுக்கல் அருகே, ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மகன் பாலமுருகன் (வயது 22) என்பது தெரியவந்தது. பெயிண்டர் வேலை செய்து வந்த அவர், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story