கிருஷ்ணகிரியில்அரசு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியையொட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், வரதட்சனை கொடுமை தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் தொடர்பான ஓவியப்போட்டி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் சமூக நல அலுவலர் விஜயலட்சுமி பங்கேற்று பேசினார். ஓவியப்போட்டியில் 25 அரசு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சட்டங்கள மற்றும் திட்டங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.