புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி
திண்டுக்கல் புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் 9-வது புத்தக திருவிழா அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திண்டுக்கல்லில் நடக்கிறது. இதை முன்னிட்டு வட்டார அளவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்று வருகிறது.
அதன்படி பழனி நகர், புறநகர் வட்டார அளவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி நேற்று பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், ரமேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கோகிலவாணி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். முடிவில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story