பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
x

தேவகோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

சிவகங்கை

தேவகோட்டை,

2-ம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. அணுவை ஆக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஹிரோஷிமா- நாகசாகி தின ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த போட்டியை தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கம், ரோட்டரி சங்கம், காஸ்மாஸ் அரிமா சங்கம் மற்றும் ப்ளூடோல்பின் பள்ளி ஆகியவை இணைந்து தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்தின.

தேவகோட்டை துணை சூப்பிரண்டு கணேஷ்குமார் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். நண்பர்கள் நடையாளர் சங்கத்தலைவர் குமரப்பன் அனைவரையும் வரவேற்றார். மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 54 பள்ளிகளைச் சேர்ந்த 2,587 மாணவர்கள் பங்கேற்றனர்.காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

1 More update

Next Story