ஆற்காட்டில் ஓவிய கண்காட்சி
ஆற்காட்டில் ஓவிய கண்காட்சி நடந்தது. கலெக்டர் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பாக கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு நிதி உதவியுடன் நடத்தும் குழு ஓவிய கண்காட்சி நடந்தது. இதில் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது சைபுத்தீனின் ஓவியக்கலையை பாராட்டி சிறந்த ஓவிய கலைஞருக்கான நினைவு பரிசினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன், ஆற்காடு ஓவிய கலைக்கூடம் டாக்டர் சண்முகம், ஓவியர் கிஷோர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story