கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் வர்ணம் பூசும் பணி தீவிரம்


கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை- பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் வர்ணம் பூசும் பணி தீவிரம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கோவை -பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது சாலை நடுவே மஞ்சள் வர்ணத்தில் கோடுகளும், சாலையின் நடுவே வெள்ளை, கருப்பு நிற வர்ணங்கள் பூசப்பட்டன. இந்த வர்ணங்கள் பூசப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் தற்போது அவை அழியும் சூழ்நிலையில் இருந்தன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமமாக இருந்தது. கடந்த சில வாரங்களாக கோவை -பொள்ளாச்சி இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் மஞ்சள் மற்றும் வெள்ளை, கருப்பு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதியில் சாலை நடுவே மஞ்சள்கலர் கோடு மற்றும் சாலை நடுவே வெள்ளை மற்றும் கருப்பு வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடுவே உள்ள சிறிய தடுப்புச்சுவர் பகுதியில் தீவிரமாக வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story