வேகத்தடை மீது வர்ணம் பூசும் பணி


வேகத்தடை மீது வர்ணம் பூசும் பணி
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வேகத்தடை மீது வர்ணம் பூசப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியில் பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பல இடங்களில் வேகத்தடைகள் மீது வர்ணம் பூசப்படாமல் உள்ளது.

இதனால் சில வாகன ஓட்டுனர்கள் மிக அருகே வந்த பிறகு வேகத்தடை இருப்பதை பார்த்து தடுமாற்றம் அடைகின்றனர். சிலர் வேகத் தடை இருப்பதை தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை இருந்தது.

எனவே வேகத்தடைகள் மீது வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி சார்பில் நகரில் முக்கிய சாலைகளில் உள்ள வேகத்தடைகள் மீது வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. அதைமாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிப்பாக ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலை, பூங்கா நகர், பிருந்தாவன் நகர், கே.என்.ஜி.புதூர் ரோடு, மற்றும் பன்மால் உள்ளிட்ட ரோடுகளில் வேகத்தடைகள் மீது வர்ணம் பூசப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story