பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை பாதிப்பு


பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-14T00:30:53+05:30)

பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது

திண்டுக்கல்


பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்வதற்காக மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் சேவை உள்ளது. இதில் ரோப்கார் சேவையில் மற்ற வழிகளை காட்டிலும் விரைவாகவும், பழனி நகரின் அழகை ரசித்தபடியும் மலைக்கோவிலுக்கு செல்ல முடிவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரோப்காரில் பயணிக்கவே விரும்புகின்றனர். இந்த ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக மலைக்கோவில் ரோப்கார் நிலையத்தில் காற்றை அளவிடுவதற்கான பிரத்யேக கருவி வைக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும் போது, பக்தர்களின் நலன் கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்படும். இந்நிலையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று மதியம் 12 மணி அளவில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் மீண்டும் இயக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே காற்றின் வேகம் மீண்டும் அதிகரித்தது. இதனால் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், மின் இழுவை ரெயில் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர்.



Next Story